×

மாதாந்திர உதவித்தொகை பெற பயனாளிகள் 11 பேருக்கு ஆணை

திருவாரூர், மார்ச் 17: திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டமானது கலெக்டர் ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. இதில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து 309 மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் ஆனந்திடம் அளித்தனர். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல் காரணமாக மறுகட்டமைப்பு மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு திட்டத்தின் கீழ் கடலோரப் பகுதிகளில் பனை விதைகள் நடும் பணியில் ஈடுபட்ட பிச்சை கட்டளை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மற்றும் தொண்டியக்காடு, கரையான் காடு, கீழவாடியக்காடு, ராஜன் கட்டளை, துளசியாப்பட்டினம் ஆகிய பள்ளிகளின் மாணவ, மாணவிகள் மற்றும் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். மேலும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் மாதாந்திர உதவித் தொகைக்கான ஆணைகளை 11 பேர்களுக்கு கலெக்டர் ஆனந்த் வழங்கினார். கூட்டத்தில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கமல் கிஷோர், டிஆர்ஓ பொன்னம்மாள், சமூக பாதுகாப்பு திட்ட தனி துணை கலெக்டர் ராமச்சந்திரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு