×

கீழ்பென்னாத்தூர் அரசுப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

கீழ்பென்னாத்தூர், மார்ச் 17: கீழ்பென்னாத்தூர் அரசு பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. கீழ்பென்னாத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 1992-1994ம் ஆண்டு பிளஸ் 2 பயின்ற முன்னாள் மாணவர்கள் 26 ஆண்டுகளுக்குப் பிறகு நேற்று முன்தினம் சந்திப்பு நடைபெற்றது. இதில் அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட செய்வது குறித்தும் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் கணிதம், அறிவியல், வரலாறு, பொறியல் மற்றும் வேளாண்மை, உள்ளிட்ட பிரிவுகள் கொண்ட சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பள்ளிப் பருவ பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். இது அனைவருக்கும் மிக்க மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தனர்.
மேலும், அரசு பள்ளியில் பயின்று பல்வேறு அரசு, தனியார் மற்றும் விவசாயம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர். அவர்கள் பயின்ற பள்ளிகளுக்கு பல்வேறு நலத்திட்டம் செய்வது குறித்தும், அதனை நிறைவேற்றுவதற்கான தீர்மானங்கள் அவர்களின் முன்னிலையில் வாசித்து நிறைவேற்றப்பட்டது.

Tags : Alumni ,Keezhennathur Government School ,
× RELATED நாட்டின் முதல் கொரோனா வைரஸ் பரிசோதனை...