×

கோயில் திருவிழா, மாடு விடும் விழா, பொதுக் கூட்டங்கள், பேரணி, போராட்டங்கள் நடத்த தடை

வேலூர், மார்ச் 17: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வேலூர் மாவட்டத்தில் மறு அறிவிப்பு வரும்வரை கோயில் திருவிழாக்கள், மாடு விடும் விழாக்கள், கூட்டங்கள், பேரணிகள், போராட்டங்கள் நடத்த தடை விதிக்கப்படுகிறது என கலெக்டர் சண்முகசுந்தரம் தெரிவித்தார். வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகள், கல்வி நிறுவனங்கள், தனியார் தொண்டு நிறுவனங்கள், வழிபாட்டு தல நிர்வாகிகள் ஆகியோருடனான ஆலோசனை கூட்டம் கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமையில் நேற்று நடந்தது.எஸ்பி பிரவேஷ்குமார், டிஆர்ஓ பார்த்தீபன், அரசு மருத்துவக்கல்லூரி டீன் செல்வி, சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மருத்துவ பணிகள் இணை இயக்குனர் யாஸ்மின் வரவேற்றார்.

்கூட்டத்தில் எஸ்பி பிரவேஷ்குமார் பேசியதாவது: கொரோனா வைரஸ் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். பொதுமக்கள் கூடும் அலுவலகங்கள், அதிகமாக வரும் அலுவலகங்கள் தீவிர கண்காணிப்பில் இருக்க வேண்டும். சமூக வலைதளங்களில் வரும் நிறைய கருத்துக்களில் நன்மையும் உண்டு, தீமையும் உண்டு. அதிகம் வதந்திகளை பரப்புகிறார்கள். அதனை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இதுதொடர்பாக குடியாத்தம் பகுதியை சேர்ந்த ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். பொதுமக்கள் கூடும் இடங்களை தவிர்க்க வேண்டும். மாஸ்க், லைசால் அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

கலெக்டர் சண்முகசுந்தரம் பேசியதாவது: உலக நாடுகளில் 93 நாடுகளில் இதுவரை இல்லாத அளவில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. வேலூரில் விஐடி, சிஎம்சி, பொற்கோயில் உள்ளது. அதிகளவில் வெளிமாநிலத்தினர் வந்து செல்கின்றனர். விஐடிக்கு ஒரு மாதம் விடுமுறை விடப்பட்டுள்ளது. சிஎம்சி மருத்துவமனை நிர்வாகம் நோயாளிகளை கண்காணித்து அவர்கள் கை கழுவும் முறைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். காய்ச்சல், தும்மல் இருப்பவர்களுக்கு மாஸ்க் வழங்க வேண்டும். உள்ளாட்சி அமைப்பினர், அதிகம் மக்கள் கூடும் இடங்கள், ரயில் நிலையங்கள், பஸ் நிலையங்களில் லைசால் தெளிக்க வேண்டும். தாசில்தார்கள் காவல்துறையுடன் இணைந்து அரசு, தனியார் மருத்துவமனையில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை சேகரித்து அனுப்பி வைக்கவேண்டும். ஒவ்வொரு ஊராட்சியிலும் லைசால் தெளிப்பான் கருவி கண்டிப்பாக இருக்கவேண்டும். குறிப்பாக பஸ் நிலையம், சமுதாய கூடம், பள்ளிகள், அங்கன்வாடி மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் தெளிக்க வேண்டும்.

நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் அதிகாரிகள் தங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வார்டுக்கு ஒரு தெளிப்பான் கருவிகள் வாங்கிக்கொள்ள வேண்டும். தெளிக்கும் பணியில் 2 பணியாளர்கள் ஈடுபடவேண்டும். குறிப்பாக அரசு, தனியார் மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் அனைவரும் உள்ளே செல்லும்போதும், வரும்போதும் கைகழுவ வேண்டும். இதற்காக வாசலில் நிரந்தரமாக சோப்பு, தண்ணீர் வைக்க வேண்டும். மாஸ்க் அதிகவிலைக்கு விற்பதாக கூறுகின்றனர். மகளிர் திட்டம் மூலம் வெல்மா, ரேஷன் கடைகளில் மாஸ்க் மற்றும் சோப் தயாரித்து விற்க நடவடிக்கை எடுக்கப்படும். மருந்து கடைகளில் மாஸ்க் கூடுதல் விலைக்கு விற்றால் டிஎஸ்ஓக்கள், மருந்தாளுனர்கள் அங்கு ஆய்வு செய்யவேண்டும். அதிகவிலைக்கு விற்பது கண்டறியப்பட்டால் போலீஸ் மூலம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பதுக்கி விற்பது தெரிந்தால் கைப்பற்றி இலவமாக விநியோகம் செய்துவிட்டு கடைகளுக்கு சீல் வைக்க முடியும். தனியார் பள்ளி, கல்லூரிகள், கோர்ட், வழபாட்டு தலங்கள் சுத்தமாக இருக்கவேண்டும்.

கை கழுவும் முறைகள் குறித்து தெரிவிக்க வேண்டும். மாணவர்கள் விடுதிகளில் சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த வேண்டும். பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் முக கவசம் தேவையின்றி போடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும்.
வேலூர் மாவட்டத்தில் திருவிழா, பொதுக்கூட்டங்கள், பேரணி, ஆர்ப்பாட்டம், மாடு விடும் விழா நடத்த தடை விதிக்கப்படுகிறது. அடுத்த அறிவிப்பு வரும் வரை எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாது. திருமண நிகழ்ச்சி மட்டும் நடத்த வேண்டும். நிச்சயத்தார்த்தம் நிகழ்ச்சி நடத்தக்கூடாது. அதேபோல் கல்வி நிறுவனங்கள் பட்டமளிப்பு விழாக்கள், கருத்தரங்குகள் நடத்த வேண்டாம். வேலூர் மாவட்டத்திற்கு வரும் திருப்பதி, கர்நாடக மாநிலங்களில் இருந்து வரும் பஸ்களில் ஒவ்வொரு முறையும் சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்கவேண்டும். அந்த பஸ்களில் வரும் பயணிகளுக்கு யாராவது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளனரா? என கண்காணிக்க வேண்டும். நாம் மிகவும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். அனைவரும் அதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

Tags : Temple Festival ,Cow Feast, Public Meetings ,Protests ,Rally ,
× RELATED தருவைக்குளம் புனித ஜெபமாலை ஆலய திருவிழாவில் அசன விருந்து