×

சென்னை, வேலூர், நெல்லை மண்டலங்களில் ஆவணங்களை அன்றே ஏன் அனுப்புவதில்லை?: சார்பதிவாளர்களுக்கு ஐஜி அலுவலகம் எச்சரிக்கை

சென்னை: சென்னை, வேலூர், நெல்லை மண்டலங்களில் ஆவணங்களை அன்றைய தினமே திருப்பி அனுப்புவதில்லை என்றும், வில்லகங்சான்று 3 நாளில் கிடைக்கவில்லை என்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்து வரும் நிலையில் பதிவுத்துறை ஐஜி அலுவலகம் சார்பதிவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் 575 சார்பதிவாளர் அலுவலகங்களில் ஆன்லைன் மூலம் பத்திரம் பதிவு செய்யும் திட்டம் கடந்த 2018 முதல் அமல்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் உலகின் எந்த மூலையில் இருந்தும் ஆன்லைனில் பதிவு செய்ய விண்ணப்பித்தால், பொதுமக்கள் குறிப்பிட்ட நாட்களில் பத்திரம் பதிவு செய்து கொள்ள முடியும் என்ற நிலை ஏற்பட்டது. இருப்பினும் ஆவணங்கள் பதிவு செய்து திருப்பி தருவதில் தாமதம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து ஆவணம் பதிவு செய்த அன்றைய தினமே திருப்பி தர வேண்டும். இல்லையெனில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அப்போதைய பதிவுத்துறை ஐஜி குமரகுருபரன் சார்பதிவாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

தொடர்ந்து, ஆவணங்கள் பதிவு செய்த அன்றைய தினமே பத்திரங்கள் திருப்பி தரப்பட்டது. ஆனால், கடந்த சில மாதங்களாக பத்திரம் பதிவு செய்தால் அன்றைய தினம் திருப்பி தருவதில்லை. குறைந்து 5 முதல் 10 நாட்கள் வரை ஆவணங்கள் தராமல் இழுத்தடித்து வருவதாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் ஆன்லைன் மூலம் வில்லங்கசான்று பெறும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஆன்லைன் 3 நாட்களில் வில்லங்கசான்று கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், வில்லங்கசான்று சான்று உடனடியாக கிடைப்பதில்லை. குறிப்பாக, சென்னை, வேலூர், நெல்லை மண்டலங்களில் வில்லங்கசான்று, ஆவணங்கள் பதிவு செய்து இழுத்தடிப்பதாக ஏராளமான புகார்கள் பதிவுத்துறை ஐஜி அலுவலகத்துக்கு வந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் பதிவுத்துறை ஐஜி அலுவலகம் சார்பில் ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டவுடன் உடனடியாக தர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போன்று வில்லங்கசான்று 3 நாட்களில் தராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சார்பதிவாளர்களுக்கு பதிவுத்துறை ஐஜி அலுவலகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Tags : Vellore ,Chennai ,Paddy Zones ,
× RELATED வேலூர் சைதாப்பேட்டையில் பல...