×

கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு

சென்னை: கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசி மருந்து தெளிக்கப்பட்டது. உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், மக்கள் கூடும் இடங்கள், வழிபாட்டுத்தலங்கள் உள்ளிட்டவைகளில் நோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.அந்தவகையில், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் வகையில் அசென்ட்யா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து சென்ட்ரல் மற்றும் விமானநிலைய மெட்ரோ ரயில் நிலையங்களில் கிருமி நாசினி தெளிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. 4 பேர் கொண்ட ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக, நிலையங்களின் உட்புறம், வெளிப்புறம், மின்தூக்கிகள், பார்க்கிங் பகுதிகளில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டது.

மேலும், மெட்ரோ ரயிலில் பயணிக்கும் பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு கைபேசி மூலம் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறுஞ்செய்தியாக அனுப்பி வருகிறது. மெட்ரோ ரயில் நிலையங்களில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க பயணிகள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை குறித்த அறிவிப்புகள் ஒலிபெருக்கிகள் மற்றும் டிஜிட்டல் பலகைகள் மூலமாக விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags : stations ,corona spread ,
× RELATED நீலகிரியில் 176 பதற்றமான...