×

இளம்பெண்ணிடம் பணம் பறித்த ஜிம் மாஸ்டர் கைது

சென்னை: திருமணம் செய்வதாக கூறி இளம்பெண்ணிடம் பணம் பிறத்த ஜிம் மாஸ்டரை போலீசார் கைது செய்தனர். சென்னை காரம்பாக்கத்தை சேர்ந்தவர் இந்து (22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் போரூரில் உள்ள உடற்பயிற்சி கூடம் ஒன்றில் கடந்த 3 ஆண்டுகளாக உடல் பயிற்சிக்கு சென்று வருகிறார். அப்போது, ஜிம் மாஸ்டர் அஜித்குமார் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.  இவர், இந்துவை திருமணம் செய்து கொள்வதாக கூறி சிறுக சிறுக லட்சக்கணக்கில் பணம் பறித்ததாகவும், இருவரும் பல இடங்களுக்கு ெசன்று நெருக்கமாக இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், தன்னை திருமணம் செய்யும்படி அஜித்குமாரிடம்  இந்து கூறியுள்ளார். ஆனால், திருமணம் செய்ய மறுத்துள்ளார். இதையடுத்து, தன்னை ஏமாற்றிய அஜித்குமார் மீது வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி போலீசார் கே.கே.நகரை சேர்ந்த அஜித்குமாரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது திருமணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்து பணம் பெற்று மோசடி செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் நேற்று முன்தினம் அவரை கைது செய்தனர்.

Tags :
× RELATED அனுமதியின்றி பட்டம் பறக்க விட்ட...