×

கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம்

திட்டக்குடி, மார்ச் 13:  திட்டக்குடியை அடுத்த கொரக்கவாடி கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில், விருத்தாசலம் அமலாக்க பிரிவு போலீசார் சார்பில் சட்டவிரோதமான மதுபானங்கள் மற்றும் கள்ளச்சாராய ஒழிப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
விருத்தாசலம் அமலாக்க பிரிவு ஆய்வாளர் பிருந்தா கலந்து கொண்டு பேசினார். முகாமில், மாணவ, மாணவிகளுக்கு  நோட்டு, பேனா, பென்சில் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. இதில், பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், அமலாக்கு பிரிவு போலீசார் துரைமுருகன், சண்முகநாதன், ரமேஷ், சுகுணா, ரவி மற்றும் போலீசார் கலந்து கொண்டனர். இதேபோல் பனையாந்தூரில் உள்ள அரசு பள்ளி
யிலும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

Tags : Counterfeit Eradication Awareness Camp ,
× RELATED கொரோனா வைரஸ் முன்தடுப்பு...