×

கரும்பு மகசூலை அதிகரிக்க விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

கடலூர், மார்ச் 13: தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம் (வணிக பயிர்கள்) கரும்பு திட்டத்தின் கீழ்  வேளாண்மை துறை சார்பில் கரும்பு விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலை களப்பணியாளர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி முகாம் கடலூர் ஒருங்
கிணைந்த வேளாண் விரிவாக்க மையத்தில் நடந்தது. வேளாண்மை துணை இயக்குநர் (மத்திய திட்டம்) வேல்விழி தலைமை தாங்கி கரும்பு சாகுபடி தொழில்நுட்ப கையேட்டை வெளியிட்டு திட்ட விளக்கவுரையாற்றினார். வேளாண்மை உதவி இயக்குநர் பூவராகன் வரவேற்றார். கடலூர் கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஜெயச்சந்திரன் தொழில்நுட்ப உரையாற்றினார். இதில் கரும்பு மகசூலை அதிகரிப்பது, பூச்சிநோய் தாக்குதலை ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்துவது, சொட்டுநீர் பாசனத்தில் ஒருங்கிணைந்த உர நிர்வாகம்். புதிய கரும்பு ரகங்களின் சாகுபடி குறித்து பேராசிரியர்கள் சண்முகநாதன், சந்திரன், காயத்ரி ஆகியோர் விளக்கவுரையாற்றினர். வேளாண்மை துணை இயக்குநர்(மாநில திட்டம்) ரமேஷ், உழவியல் முறைகள் குறித்து விளக்கினார். வேளாண்மை உதவி இயக்குநர்(பயிர் காப்பீடு) மலர்வண்ணன், பயிர் காப்பீடு மற்றும் பயிர் எண்ணிக்கை பராமரித்தல் குறித்து விளக்கினார். பயிற்சிக்கான ஏற்பாடுகளை உதவி வேளாண்மை அலுவலர்கள் பிரபாகரன், விஜயகுமார், சங்கரதாஸ் ஆகியோர் செய்திருந்தனர். கடலூர் வேளாண்மை அலுவலர் சுகன்யா  நன்றி கூறினார். அட்மா திட்ட வட்டார தொழில்நுட்ப மேலாளர் இளங்கோவன், உதவி தொழில்நுட்ப மேலாளர்கள், கண்ணன், அருண்ராஜ் ஆகியோர் செயல் விளக்கத்திற்கான ஒருங்கிணைப்பை செய்திருந்தனர்.

Tags : Farmers Training Camp ,
× RELATED விவசாயிகள் பயிற்சி முகாம்