×

திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருவில்லிபுத்தூர், மார்ச் 13: திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா முன்னிட்டு நேற்று கொடியேற்றம் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் திருவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். அந்த வகையில் இந்தாண்டு பூக்குழி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இதற்காக கொடி பட்டத்திற்கு மேளதாளங்கள் முழங்க திருவில்லிபுத்தூர் நகரில் முக்கிய வீதிகளான தெற்கு ரதவீதி, வடக்கு ரதவீதி, மேல ரதவீதி, கீழரத வீதி என பல்வேறு வீதிகளில் கொண்டு வரப்பட்டு பின்னர் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.இதனைத் தொடர்ந்து கோயிலில் காலை கொடி மரத்திற்கும் கொடி பட்டத்திற்கும் சிறப்பு பூஜைகள் தீப ஆராதனைகளும் நடைபெற்றன. இதனைத் தொடர்ந்து 8.40 மணிக்கு கூடியிருந்த பக்தர்கள் குலவையிட மேளதாளம் முழங்க கோலாகலமாக கொடியேற்றப்பட்டது. இந்நிகழ்ச்சியில் திருவில்லிபுத்தூர் நகரைச் சேரந்தஏராளமான பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியதை முன்னிட்டு பெரிய மாரியம்மனுக்கு சிறப்பு பூஜைகளும், தீப வழிபாடு நடைபெற்றது. சர்வ அலங்காரத்தில் பெரிய மாரியம்மன் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா மார்ச் 23ம் தேதி மதியம் நடைபெற உள்ளது. இதனையடுத்து தேர்த்திருவிழா 24ம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. பூக்குழி திருவிழா கொடியேற்ற ஏற்பாடுகளை தக்கார் இளங்கோவன், நிர்வாக அதிகாரி கலாராணி மற்றும் கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர். கோயில் கொடியை கோயில் அர்ச்சகர் ஹரி ஏற்றினார்.பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளதால் கோயில் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது. ஏராளமான பக்தர்கள் வந்ததால் டிஎஸ்பி ராஜேந்திரன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது

Tags : Srivilliputhur Periyar Mariamman Temple Pookkali Festival ,
× RELATED பணம் திருடியவர் கைது