×

ஊராட்சி ஒன்றிய கவுன்சில் கூட்டம்

ராஜபாளையம், மார்ச் 13: ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய முதல் கூட்டம் நேற்று நடந்தது. ஒன்றிய தலைவர் தேர்விற்கு பின் ஏற்கனவே கடந்த பிப். 21ல் அறிவித்து சில காரணங்களால் இக்கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நேற்று காலை ஒன்றிய தலைவர் சிங்கராஜ் தலைமையில் நடைபெற்றது. பிடிஓ சிவக்குமார் வரவேற்றார். அதிமுக கவுன்சிலர் ஒருவர் ஆப்சென்ட் ஆகினார். பிடிஓ சத்தியவதி, மேலாளர் பாண்டீஸ்வரன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஒன்றிய துணைத்தலைவர் துரை கற்பகராஜ் நன்றி கூறினார். இக்கூட்டத்தில் மொத்தம் 75 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.ராஜபாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திற்கு புதிய கட்டடத்திற்கான அறிவிப்பு வெளியிட்ட முதல்வருக்கும், அதற்கு பரிந்துரைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என அதிமுக கவுன்சிலர்ள் தெரிவித்தனர் புது கட்டட அறிவிப்பிற்கு அனைத்து உறுப்பினர்களும் எந்த கட்சி பாகுபாடும் நன்றி தெரிவித்து ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தலைவர் கூறினார். திமுக கவுன்சிலர் முத்துலட்சுமி கூறுகையில், சமுசிகாபுரம் பகுதிக்குட்பட்ட மில் கிருஷ்ணாபுரம் கிராம மெயின் ரோடு பணி நான்கு மாதங்களாக கிடப்பில் உள்ளது. இப்பகுதியில் நான்கு பெரிய ஜவுளி மில்கள் உள்ள இப்பகுதியில் ஜல்லிக்கற்களோடு பணிகள் நிற்கிறது என்று கூறினார். அதற்கு, இந்த ரோடு தற்போது நகராட்சியின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது. தடையில்லா சான்று பெற்றவுடன் மீதிப்பணிகளுக்கான வேலைகள் துவங்கி விடும் என பிடிஓ பதிலளித்தார்.

Tags : Union Council ,meeting ,
× RELATED திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடந்த...