×

வடுகப்பட்டி பேரூராட்சியில் கொரோனா விழிப்புணர்வு முகாம்

பெரியகுளம், மார்ச் 13: பெரியகுளம் அருகே உள்ள வடுகப்பட்டி பேரூராட்சி பகுதியில் பேரூராட்சி நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறை சார்பாக கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து வடுகப்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டது. முகாமிற்கு பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ் தலைமை வகித்தார். சுகாதார ஆய்வாளர் ரெங்கராஜ், பள்ளி தலைமையாசிரியர் தர்மராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில் கொரோனா வைரஸ் பாதிக்காமல் இருப்பதற்கான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. மேலும் செய்முறை விளக்கமும் செய்து காண்பிக்கப்பட்டது. மேலும் பள்ளி மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

Tags : Corona Awareness Camp ,North Bay ,
× RELATED புதுச்சத்திரத்தில் கொரோனா விழிப்புணர்வு முகாம்