போடி அருகே சிகரெட் வாங்க சென்றவர் படியில் தவறி விழுந்து சாவு சுற்றுலா வந்த இடத்தில் சோகம்

போடி, மார்ச் 13: போடி அருகே சிகரெட் வாங்க படியில் இறங்கியவர் தவறி விழுந்து உயிரிழந்தார்.புதுகோட்டை மாவட்டம், சார்லஸ்நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கண்ணுச்சாமி மகன் முருகேசன்(48).இவர் தனது நண்பர்கள் சஞ்சை பிரகாஷ், செந்தில்குமார், மணிகண்டன் ஆகியோருடன் தேனி மாவட்டம் போடி மெட்டுக்கு சுற்றுலா வந்தார். நேற்று முன்தினம் போடி மெட்டை சுற்றி பார்த்துவிட்டு இரவு போடி முந்தல் அருகே உள்ள தனியார் விடுதியில் தங்கினர். இரவில் மொட்டை மாடியில் நண்பர்களுடன் நின்று குளிர்ந்த காற்று வாங்கிக் கொண்டு முருகேசன் பேசி கொண்டிருந்தார்.அப்போது முருகேசன் மட்டும் சிகரெட் வாங்குவதற்காக படி வழியாக கீழே இறங்கினார். கால் தவறியதால் அப்படியே தடுமாறி தரையில் விழுந்தார். இதில் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு முதல்கட்ட சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்காக க.விலக்கு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த முருகேசன் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் பரிதாபமாக இறந்துவிட்டார். இது குறித்து நண்பர் சஞ்சை பிரகாஷ் போடி குரங்கணி காவல்நிலையத்தில்புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>