×

மகளிர் தினம் கொண்டாட்டம்

திருச்சி, மார்ச் 13: திருச்சி மாவட்ட இயக்க மேலாண்மை அலகு மற்றும் மாநகராட்சி சார்பில் அரியமங்கலம் கோட்டத்தை சேர்ந்த சுய உதவி குழு உறுப்பினர்களுடன் மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. காந்தி மார்க்கெட்டிலிருந்து பாலக்கரை வழியாக அரியமங்கலம் கோட்ட அலுவலகம் வரை பேரணி நடைபெற்றது. பேரணியை உதவி திட்ட அலுவலர் ரித்திஸ் தொடங்கி வைத்தார். விழாவையொட்டி சுய உதவிக் குழு உறுப்பினர்களுக்கு விளையாட்டு மற்றும் கோல போட்டிகள் நடைபெற்றது. தொடர்ந்து கையெழுத்து பிரசாரமும் நடைபெற்றது. விழாவிற்கு அரியமங்கல கோட்ட உதவி ஆணையர் திருஞானம் தலைமை வகித்தார். நிர்வாக அலுவலர் ரமேஷ், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ரேவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கீதாஞ்சலி வரவேற்றார். பத்மா ராணி நன்றி கூறினர். விழாவில் சுயஉதவிக் குழு உறுப்பினர்கள் 300 பேர்கலந்து கொண்டனர்.

Tags : Women's Day Celebration ,
× RELATED உலக மகளிர் தின விழா கொண்டாட்டம்