×

மீண்டும் வேலை வழங்க கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் திருச்சியில் ஆர்ப்பாட்டம்

திருச்சி, மார்ச் 13: மீண்டும் வேலை வழங்க கோரி சுமைப்பணி தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். வேலை நீக்கம் செய்யப்பட்ட 20 துப்புரவு தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை வழங்க வேண்டும், சிஐடியு நிர்வாகிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்தவர்களை கைது செய்ய வேண்டும் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சுமைப்பணி தொழிலாளர்கள் சங்கம் சார்பில், திருச்சி குட்ஷெட்டில் சிஐடியூ மாவட்ட தலைவர் ராமர் தலைமையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாவட்ட தலைவர் ராஜா, சிஐடியூ மாவட்ட செயலாளர் ரெங்கராஜன் ஆகியோர் பேசினர்.

திருச்சி குட்ஷெட் பாரம் சுமக்கும் தொழிலாளர்கள் சங்க தலைவர் சேகர், செயலாளர் சிவக்குமார், சிஐடியூ மாவட்ட துணை செயலாளர் மணிமாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில், கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 17ம் தேதி திருச்சி மாநகராட்சி அலுவலகம் முன்பு குடும்பத்துடன் காத்திருப்பு போராட்டம் நடத்துவது என அறிவித்தனர்.

Tags : Trichy ,
× RELATED திருச்சியில் இருந்து ஒடிசாவுக்கு...