×

சிவகங்கையில் மும்மதத்தினர் சார்பில் பள்ளிவாசலில் ரத்ததான முகாம்

சிவகங்கை, மார்ச் 13: சிவகங்கை இஸ்லாமிய கூட்டமைப்பு, வீரமாகாளியம்மன் திருக்கோயில், புனித அலங்கார அன்னை பேராலயம் சார்பில் இம்முகாம் நடந்தது. சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மருத்துவர்கள் ரத்தம் சேகரித்தனர். நிகழ்ச்சி தொடக்கத்தில் பள்ளி வாசல் தலைவர் அன்வர்பாட்சா வரவேற்றார். மாவட்ட எஸ்பி ரோகித்நாதன் ராஜகோபால் ரத்த தானம் செய்து நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஜெயகாந்தன், சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டீன் ரத்தினவேல், வீரமாகாளியம்மன் கோயில் நிர்வாகிகள் கண்ணன், குருகணேசன், சிவகங்கை மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப்லூர்துராஜா, புனித அலங்கார அன்னை பேராலய அருட் தந்தை மரியடெல்லஸ் மற்றும் சிவகங்கை அனைத்து பள்ளி வாசல் நிர்வாகிகள், இஸ்லாமிய அமைப்பு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இம்முகாமில் 80 பேர் ரத்ததானம் செய்தனர். பள்ளிவாசல் துணைத்தலைவர் நைனாமுகம்மது நன்றி கூறினார்.

Tags : camp ,Sivaganga ,
× RELATED தமிழகத்தில் பல்வேறு...