×

வெக்காளியம்மன் கோயிலில் 20ம் தேதி பூச்சொரிதல் விழா

திருச்சி, மார்ச் 13: உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் வரும் 20ம் தேதி பூச்சொரிதல் விழா நடக்கிறது. ஊரெனப்படுவது உறையூர் என்றழைக்கப்படும் வரலாற்று சிறப்பு மிக்க உறையூரில் வெக்காளியம்மன் வீற்றிருக்கிறார். திருச்சி மாநகரின் ஒரு பகுதியாக விளங்கும் ஊறையூரில், புராணக்காலத்தில் பட்டி விக்கிரமாதித்தன் அன்னை காளியின் அருள் பெற்றவர். கவி சக்ரவர்த்தி கம்பர், ராமகிருஷ்ணர், பாரதி ஆகியோர் காளியன் சிறந்த பக்தர்களாக விளங்கினர். கல்விக்கு சரஸ்வதி, செல்வத்துக்கு லட்சுமி, வலிமைக்கு துர்க்கையை வணங்கி வரும் இந்து மக்கள் இம்மூன்று செல்வமும் ஒருங்கே பெற வெக்காளியம்மனை வணங்கி வருகின்றனர். உறையூர் வெக்காளியம்மன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் முதல் வெள்ளிக்கிழமை பூச்சொரிதல் விழா நடத்தப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு வரும் 20ம் தேதி பூச்சொரிதல் விழா வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. உதவி ஆணையர்கள் ராணி, ஞானசேகர் மற்றும் உபயதாரர்கள் விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.

Tags : ceremony ,Vekkaliamman temple ,
× RELATED விநாயகர் கோயில் கும்பாபிஷேக விழா