×

நள்ளிரவில் மணப்பாறை சென்றபோது பைக்கில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாப சாவு

திருச்சி, மார்ச் 13: திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்து ஆதிகுளத்தை சேர்ந்தவர் முருகேஷ் (52). இவர் நேற்று முன்தினம் பைக்கில் திண்டுக்கல் ரோட்டில் மணப்பாறை நோக்கி சென்றார். இனாம்குளத்தூர் அருகே நள்ளிரவு சென்றபோது திடீரென பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த முருகேஷ், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதில் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை 9 மணியளவில் இறந்தார். இதுகுறித்து ராம்ஜிநகர் போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே ரஜினி ரசிகர் ஒருவர் டிவியில் ரஜினி பேச்சை கேட்டபோது, மாரடைப்பு ஏற்பட்டு பலியானதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவியதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Manaparari ,
× RELATED பைக் திருடி ஆன்லைனில் விற்றவர் கைது