×

சட்ட விழிப்புணர்வு முகாம்

திருச்சி, மார்ச்13: துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உலக மகளிர் தினம் மற்றும் சட்ட விழிப்புணர்வு முகாம், தனியார் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது. உலக மகளிர் தினம் மற்றும் துறையூர் வட்ட சட்டப்பணிகள் குழுவின் தலைவரும் சார்பு நீதிபதி சிவக்குமார் பேசுகையில், மாணவிகள் தங்களுக்கு உண்டான தகுதியை கல்வியில் கவனமாக செலுத்தி கல்லூரிக்கும் தங்களது பெற்றோருக்கும் நல்ல பெயர் கிடைக்குமாறு நடக்க வேண்டும். தொலைபேசியினை பயன்படுத்தும் போது தங்களது படிப்பு சம்மந்தப்பட்டவைகளுக்கும் மட்டுமே பயன்படுத்துமாறு தெரிவித்தார். கனிணி குற்றங்களை குறைப்பதற்கு உங்களுக்கு சம்மந்தமில்லாத செய்தியினை பின் தொடர வேண்டாம்.

தேவையற்ற செய்திகள் உங்களுக்கு வந்தால் கல்லூரியிலோ அல்லது அருகில் இருக்கும் காவல் நிலையங்களிலோ அல்லது சட்ட உதவி மையங்களிலோ புகார் அளிக்க வேண்டும் என்றார். வழக்கறிஞர் சங்கத்தலைவர் ராமசாமி, துறையூர் வட்டாச்சியர் அகிலா, கல்லூரி செயலாளர் இளவரசி, சட்டப்பணிகள் குழுவின் சட்டத்தன்னார்வலர்கள் குருநாதன், ராமையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Legal Awareness Camp ,
× RELATED செட்டியாபத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம்