×

முசிறி அடுத்த திருத்தலையூர் சப்தரிஷீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்

முசிறி, மார்ச் 13: முசிறி அருகே அமைந்துள்ள திருத்தலையூர் கிராமத்தில் குங்குமாம்பிகை உடனுறை சப்தரிஷீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடைபெற்றது. ராவணன் தன் தலையை திருகியாக வேள்வியில் இட்டு பூஜை செய்த தலம் என்பதால் திருகுதலையூர் என்ற பெயர் மருவி திருத்தலையூர் என்று ஆனது. சப்தரிஷிகள் இத்தலத்தில் ஈஸ்வரனை பூஜித்ததால் சப்தரிஷீஸ்வரர் என மூலவர் அழைக்கப்படுகிறார். தல விருட்சமாக மருதமரம் வழிபடப்படுகிறது. மிகவும் பழமையான ஆன்மீக புராண சம்பவங்களோடு தொடர்புடையது இக்கோயில் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகவும் சிறப்பு வாய்ந்த இக்கோயில் கும்பாபிஷேக விழா கடந்த 9ம்தேதி துவங்கியது. இதையொட்டி புனிதநீர் எடுத்துவரப்பட்டு கணபதி வழிபாடு, தனபூஜை, வாஸ்து சாந்தி, அஷ்டபந்தனம் சாற்றுதல், வேதபாராயணம், நவகிரக பூஜை, கோபுர கலசங்கள் வைத்தல், கடம் புறப்பாடு உள்ளிட்ட பல்வேறு சிறப்பு பூஜைகளும் வழிபாடுகளும் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நேற்று கோபுர கலசத்திற்கு புனிதநீர் ஊற்றி சிவாச்சாரியார்கள் கும்பாபிஷேகம் செய்து வைத்தனர். அதனைத் தொடர்ந்து மூலவர் குங்குமாம்பிகை, சப்தரிஷிஸ்வரர் மற்றும் ஆலய பிரகார தெய்வங்களுக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனைகள் நடைபெற்றது. திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரவு ரூ.1.33.547.05 - செலவு ரூ.1,33,504.40 = உபரி ரூ.42.65 வரவு செலவு சுருக்கம் கல்வி நிதி: வரவு ரூ.1451 - (வருவாய் நிதி செலவு ரூ.376.50 மற்றும் மூலதன நிதி செலவு ரூ.1050    ஆகியவை சேர்த்து) மொத்தம் செலவு ரூ.1426.50.

Tags : Musiri ,devotees ,Purayallur Saptarisheeswarar ,pilgrimage ,
× RELATED சாலப்பட்டியில் இடமாற்றம் செய்யப்பட்ட ரேஷன் கடை திறப்பு