×

துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரித்த ஏகே 47 ரக துப்பாக்கிகள் சிஆர்பிஎப்-ல் ஒப்படைப்பு

திருவெறும்பூர், மார்ச் 13: திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஏகே 47 ரக துப்பாக்கிகள் சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்துவதற்காக நேற்று, சிஆர்பிஎப் படை டிஐஜி ராவத்திடம் ஒப்படைக்கப்பட்டது. திருச்சியில் உள்ள துப்பாக்கி தொழிற்சாலையில், மத்திய மற்றும் மாநில போலீஸ் பாதுகாப்பு படையினருக்கான பல்வேறு ரக துப்பாக்கிகள் தயார் செய்து வழங்கப்படுகிறது. கடந்த 2015ம் ஆண்டில், ஏ.கே 47 ரக துப்பாக்கிகள் தயாரிப்பதற்காக, ‘திருச்சி அசால்ட் ரைபிள்’ திட்டம் துவங்கப்பட்டது. 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தில் இந்த திட்டத்தில் தயாரிக்கப்பட்ட 200 துப்பாக்கிகள், சட்டீஸ்கர் மாநில போலீசாருக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து, மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் மாநில போலீஸ் படையினரின் பயன்பாட்டுக்காக, துப்பாக்கிகள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அப்படி புதிதாக தயாரிக்கப்பட்ட நவீன துப்பாக்கிகள் ஹரியானாவில் உள்ள மத்திய தொழில் பாதுகாப்பு படை முகாமில், சோதனை முறையில் சுட்டு பார்க்கப்பட்டு, பிறகு சிஆர்பிஎப் வீரர்கள் பயன்படுத்துவதற்காக ஆர்டர்கள் பெறப்பட்டது. அதனைபடி 6,167 ஏ.கே.47 ரக துப்பாக்கிகள் தயாரிக்க ஆர்டர் பெறப்பட்டதில், 500 துப்பாக்கிகள் தயாரிக்கப்பட்டு நேற்று சிஆர்பிஎப் படை டிஐஜி ராவத்திடம் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலை அதிகாரிகள் வழங்கினர். இதுகுறித்து, துப்பாக்கி தொழிற்சாலை பொது மேலாளர் சிரிஸ் கரே கூறியதாவது: இந்தோ- திபெத் எல்லை பாதுகாப்பு படை மற்றும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்களுக்கான பல்விதமான ரக துப்பாக்கிகள் திருச்சி துப்பாக்கி தொழிற்சாலையில் தயாரித்து வழங்கப்படுகிறது. கடந்த 12, 13 ஆண்டுகளில், 17 ஆயிரம் துப்பாக்கிகள் இங்கிருந்து தயாரித்து வழங்கப்பட்டுள்ளது. தற்போது 16 ஆயிரம் துப்பாக்கிகள் தயாரிப்பதற்கான ஆர்டரும் பெறப்பட்டுள்ளது என்றார்.

Tags : CRKF ,gun factory ,
× RELATED திருச்சி அருகே துணிகரம் துப்பாக்கி...