×

கைப்பந்து போட்டியில் வெற்றி மாணவர்களுக்கு பாராட்டு

சாயல்குடி, மார்ச் 13:  ராமநாதபுரத்தில் நடந்த கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட நேரு யுவகேந்திரா சார்பில் கைப்பந்து போட்டி ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு அரங்கில் நடந்தது. இதில் 12 அணிகள் கலந்து கொண்டு விளையாடியது. இதில் முதல் இடத்தை சித்தார்கோட்டை சமூகநல அமைப்பும், இரண்டாம் இடத்தை சித்தார்கோட்டை முகம்மதியா மேல்நிலைப் பள்ளியும் பெற்றது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடந்தது. விழாவிற்கு தாளாளர் அகம்ம துகபீர் தலைமை வகித்தார். தலைமையாசிரியர் அகமதுகபீர் முன்னிலை வகித்தார். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் நேமன் அக்ரம், உடற்கல்வி செயலாளர் ரமேஷ், உடற்கல்வி ஆசிரியர்அஜிஸ்கனி ஆகியோர் பாராட்டினர். மாணவர்களுக்கு பரிசுகள், கோப்பைகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Tags : volleyball tournament ,
× RELATED ஐஏஎஸ், ஐபிஎஸ் தேர்வுகளில் வெற்றி பெற்ற...