×

இன்று அம்மா திட்ட முகாம்

மதுரை, மார்ச் 13: மதுரை மாவட்ட வருவாய்த்துறை சார்பில் அனைத்து தாலுகா அலுவலகப் பகுதிகளில் அம்மா திட்ட முகாம் இன்று நடைபெறுகிறது. இதில் தாசில்தார்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெறுகின்றனர்.
இதன்படி கள்ளிக்குடி தாலுகாவில் மேலஉப்பிலிகுண்டுவிலும், மேலூர் தாலுகாவில் சென்னகரம்பட்டியிலும், உசிலம்பட்டி தாலுகாவில் உசிலம்பட்டி டவுனிலும், மதுரை கிழக்கு தாலுகாவில் விளாத்தூரிலும், வாடிப்பட்டி தாலுகாவில் சின்னமநாயக்கன்பட்டியிலும், திருமங்கலம் தாலுகாவில் கப்பலூரிலும், மதுரை வடக்கு தாலுகாவில் சின்னப்பட்டியிலும், பேரையூர் தாலுகாவில் காளப்பன்பட்டியிலும், மதுரை தெற்கு தாலுகாவில் நெடுங்குளத்திலும், மதுரை மேற்கு தாலுகாவில் புதுக்குளத்திலும், திருப்பரங்குன்றம் தாலுகாவில் தனக்கன்குளத்திலும் நடைபெற உள்ளது. இதில் விவசாயிகள், பொதுமக்கள் கலந்து கொண்டு, பட்டா மற்றும் பல்வேறு கோரிக்கை தொடர்பான மனுக்கள் கொடுக்கலாம். மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் வினய் தெரிவித்துள்ளார்.

Tags : Mom Project Camp ,
× RELATED ஒரு ஓட்டு கூட போடாத இரண்டு கிராமமக்கள்