×

மள்ளப்புரம்-மயிலாடும்பாறை இடையே தரமற்ற முறையில் சாலை அமைப்பு விவசாயிகள் புகாரால் திமுக மாநில நிர்வாகி ஆய்வு

உசிலம்பட்டி, மார்ச். 13: மதுரை மாவட்டம், எழுமலை அருகே மேற்குத்தொடர்ச்சி மலையில் மள்ளப்புரம்-மயிலாடும்பாறை இணைப்புச்சாலை உள்ளது. மதுரை, தேனி மாவட்ட விவசாயிகள் பயன்பெறும் வகையில், இந்த இணைப்புச் சாலையை சீரமைக்க பல போராட்டங்களை நடத்தினர். இதன் எதிரொலியாக இந்த சாலையில், 5 கி.மீ தூரத்திற்கு ரூ.50 லட்சத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆனால், இப்பணி தரமற்ற முறையில் நடப்பதால் போராட்டம் நடத்தப்படுவதாக மதுரை மற்றும் தேனி மாவட்ட விவசாயிகள் திமுக கொள்கை பரப்பு செயலாளர் தங்கத்தமிழ்செல்வனிடம் புகார் அளித்தனர். இது தொடர்பாக எம்.கல்லுப்பட்டி விவசாயிகளை தங்கதமிழ்செல்வன் நேற்று சந்தித்தார். பின்னர் மள்ளப்புரம்-மயிலாடும்பாறை மார்க்கத்தில் நடக்கும் சாலைப் பணியை பார்வையிட்டார். பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், ‘தமிழகத்தில் பொதுமக்கள் என்னை அழைததால் மட்டுமே அரசியலுக்கு வருவேன் என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இருப்பதாக கூறுகிறார். தமிழகத்தை ஆளும் திறன் திமுஅக் தலைவர் மு.க.ஸ்டாலினிடம் மட்டுமே உள்ளது. நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் வெற்றிகள் அவரது ஆளுமையை காட்டியுள்ளன. ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்து, எம்.எல்.ஏவாகி ஆளுமைத் திறன் குறித்து பேசலாம்’ என்றார்.

Tags : DMK ,state inspector ,road system farmers ,Mallappuram ,Mayiladuthurai ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்