×

கோயிலில் கும்பாபிஷேக விழா

உசிலம்பட்டி, மார்ச் 13: எழுமலை அருகே, எம்.கல்லுப்பட்டியில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி மங்கள இசையுடன் முதல் கால யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கால யாக சாலை பூஜைகள் நடந்தன. இதை தொடர்ந்து ஸ்பரிஸ தகுதி, பத்ரகாளியம்மன், மாரியம்மன், விநாயகர், முருகன், நவக்கிரக பீடபூஜை, கிராம தெய்வ வழிபாடு உள்ளிட்ட நான்காம் கால யாக பூஜைகள் நடைபெற்றன. கோ பூஜையுடன் பத்ரகாளியம்மனுக்கு சக்தி உருவேற்றி, கடம் புறப்பாடு நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர், புனித நீர் கலசங்களுடன் கோயிலை வலம் வந்து, கோபுரத்தில் உள்ள விமான கலசத்திற்கு புனிதநீர் ஊற்றப்பட்டது. அர்ச்சகர் ராம்குமார் தலைமையிலான குழுவினர் யாகசாலை பூஜைகளை செய்தனர்.இதற்கான ஏற்பாடுகளைம் எம்.கல்லுப்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் திருப்பணிக் குழுவினர்கள் செய்திருந்தனர். விழாவில் அனைவருக்கும் அன்னதானம் நடைபெற்றது.

Tags : ceremony ,temple ,
× RELATED அவிநாசிலிங்கேசுவரர் கோயில் திருவிழா; சுவாமி புறப்பாடு