×

திருமங்கலத்தில் ஆர்டிஓ அலுவலகம் மீண்டும் இடமாற்றம்

திருமங்கலம், மார்ச் 13: திருமங்கலத்தில் தாசில்தார் குவாட்டர்ஸில் இயங்கி வந்த ஆர்டிஓ அலுவலகம், மீண்டும் தாலுகா அலுவலகத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டது. உசிலம்பட்டி வருவாய் கோட்டத்தில் இருந்து, திருமங்கலம் புதிய வருவாய் கோட்டம் கடந்தாண்டு பிரிக்கப்பட்டது. இதில் திருமங்கலம், கள்ளிக்குடி, திருப்பரங்குன்றம் தாலுகாக்கள் உள்ளன. புதிய வருவாய் கோட்ட அலுவலகம், திருமங்கலம் தாலுகா அலுவலக மேல்மாடியில் செயல்பட்டு வந்தது. இதையடுத்து ஆர்டிஓவாக பொறுப்பேற்ற முருகேசன் ஆர்டிஓ அலுவலகத்தை தாசில்தார் அலுவலகத்திலிருந்து, திருமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் அருகே உள்ள தாசில்தார் குடியிருப்புக்கு இடமாற்றம் செய்தார். கடந்த 10 மாதங்களுக்கு மேலாக திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் அங்கு செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த வாரம் ஆர்டிஓ முருகேசன் பணி மாறுதல் செய்யப்பட்டார். அவருக்கு பதில் புதிய ஆர்டிஓவாக செளந்தர்யா நியமிக்கப்பட்டார். அவர் பொறுப்பேற்றவுடன் ஆர்டிஓ அலுவலகத்தை மீண்டும் திருமங்கலம் தாலுகா அலுவலகத்திற்கு மாற்றினார். தாலுகா அலுவலகத்தில் சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் அறைக்கு எதிராக உள்ள மீட்டிங் ஹாலில் திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

Tags : office ,RTO ,Thirumangalam ,
× RELATED வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே...