×

திருமங்கலம் அருகே அகலப்படுத்தும் பணிக்காக பெயர்க்கப்பட்ட சாலை பணியை கிடப்பில் போட்டதால் வாகன ஓட்டிகள் அவதி

திருமங்கலம், மார்ச் 13: திருமங்கலம் அருகே, அகலப்படுத்தும் பணிக்காக தார்ச்சாலையை பெயர்த்துப்போட்டு, பணியை கிடப்பில் போட்டதால் போக்குவரத்துக்கு கிராம மக்கள், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். திருமங்கலம் அருகே, கூடக்கோவில் கிராமத்திலிருந்து மேலக்கோட்டை வரை நெடுஞ்சாலை செல்கிறது. இந்த சாலையை அகலப்படுத்தும் பணி, கடந்தாண்டு முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில், மேலக்கோட்டையிலிருந்து உலகாணி வரை சாலை அகலப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. ஆனால், உலகாணியிலிருந்து சின்ன உலகாணி-கூடக்கோவில் வரை, அகலப்படுத்தும் பணிக்காக ஏற்கனவே இருந்த தார்ச்சாலையில், ஆங்காங்கே சுரண்டி தார்களை எடுத்துள்ளனர். இதனால், சாலையில் மேடு, பள்ளம் ஏற்பட்டுள்ளது. சின்ன உலகாணியிலிருந்து கூடக்கோவில் வரை வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர். டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சராவதாக கூறுகின்றனர். மேலும், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றன. இந்த சாலை வழியாகத்தான் திருமங்கலத்திலிருந்து காரியாபட்டி மற்றும் கூடக்கோவில், மதுரையிலிருந்து மேலஉப்பிலிக்குண்டு, சின்ன உலகாணி உள்ளிட்ட பல ஊர்களுக்கு டவுன் பஸ்கள் சென்று வருகின்றன. சாலை சேதமடைந்துள்ளதைக் காரணம் காட்டி, பலமுறை பஸ்களின் போக்குவரத்தை நிறுத்துகின்றனர். இதனால், கிராம மக்கள் அவதிப்படுகின்றனர்.எனவே, உலகாணியிலிருந்து கூடக்கோவில் வரை சாலையை அகலப்படுத்தும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Motorists ,Thirumangalam ,
× RELATED பிரதமர் அடிக்கல் நாட்டியும்...