×

புளியம் பழம் சீசன் நத்தம் பகுதியில் துவக்கம் விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலை

நத்தம், மார்ச் 13: நத்தம் பகுதியில் புளியம்பழம் சீசன் துவங்கியுள்ளது. விளைச்சல் குறைவால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நத்தம் பகுதியில் புன்னப்பட்டி, உலுப்பகுடி, வேலாயுதம்பட்டி, முளையூர், குட்டுப்பட்டி, சமுத்திராபட்டி, சிறுகுடி, கோட்டையூர், காசம்பட்டி உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு மானாவாரியாக உள்ள பகுதிகளிலும், ஓடை, கண்மாய் கரை, குட்டுகள் போன்ற பகுதிகளில் புளியமரங்களை வைத்து விவசாயிகள் பராமரித்து வருகின்றனர். ஆண்டுக்கு ஒரு தரம் மகசூல் தருபவை புளிய மரங்கள். இவைகள் இப்பகுதியில் பெரும் மரங்களாகவும் உள்ளது. இந்த மரத்தின் ஆயுளையும் விளைச்சலையும் விவசாயிகள் மத்தியில் குறிப்பிடும்போது புளி ஆயிரம் பொந்து ஆயிரம் என்று விவசாயிகள் கூறுவர்.தற்சமயம் புளி சீசன் தொடங்கியதைத் தொடர்ந்து மரங்களில் இருந்து அறுவடை செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : start ,tamarind fruit season ,
× RELATED பொதுமக்கள் வௌியே செல்ல அச்சம் கோடை துவங்கும் முன் சுட்டெரிக்கும் வெயில்