×

கேரள நிலக்கடலை வியாபாரி திண்டுக்கல்லில் விஷம் குடித்து தற்கொலை

திண்டுக்கல், மார்ச் 13: கேரளாவைச் சேர்ந்த நிலக்கடலை வியாபாரி திண்டுக்கலில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை.நடத்தி வருகின்றனர்.கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் விஜயன் (64). நிலக்கடலை வியாபாரம் செய்து வருகிறார். இவர் வியாபாரத்திற்காக ஆந்திரா, தமிழ்நாடு, கர்நாடகா பகுதிகளுக்குச் செல்வது வழக்கம். மேலும் அந்தந்த ஊர்களில் நிலக்கடலை விற்பனை செய்த தொகையை வசூல் செய்வதற்காக விடுதிகளில் தங்குவது வழக்கம். இதற்கிடையே கடந்த பத்தாம் தேதி திண்டுக்கல் பகுதியில் வசூல் செய்ய வந்த விஜயன் பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார்.நேற்று முழுவதும் அவரது அறையின் கதவு திறக்கப்படவில்லை. இந்நிலையில் நேற்று காலை விடுதி துப்புரவு பணியாளர் அறையை சுத்தம் செய்வதற்காக விஜயன் தங்கியிருந்த அறையை தட்டியுள்ளார். ஆனால் நீண்ட நேரம் திறக்கப்படவில்லை. மேலும் அறையில் இருந்து துர்நாற்றம் வீசியது. இதைத்தொடர்ந்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசாருக்கு விடுதி நிர்வாகத்தினர் தகவல் கொடுத்தனர்.

Tags : land dealer ,Kerala ,suicide ,Dindigul ,
× RELATED கேரளாவில் மேலும் 57 பேருக்கு கொரோனா தொற்று உறுதி