×

காய்கறி மார்க்கெட்டில் குளிர்பதன கிடங்கு திமுக கொறடா சக்கரபாணி வலியுறுத்தல்

சென்னை, மார்ச் 13: ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் அருகே குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டுமென ஒட்டன்சத்திரம் திமுக எம்எல்ஏ அர.சக்கரபாணி வலியுறுத்தினார்.சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின்போது ஒட்டன்சத்திரம் எம்எல்ஏவும், திமுக கொறடாவுமான அர.சக்கரபாணி பேசியதாவது:திண்டுக்கல் மாவட்டம் என்பது தமிழகத்தில் மிகப் பெரிய காய்கறி மார்க்கெட் உள்ள பகுதியாகும். இந்த காய்கறி சந்தையில் இருந்து அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்களுக்கு தமிழகத்தில் இருந்து ஏராளமான விவசாயிகள் கொண்டுவரும் காய்கறிகளை லாரிகளில் அனுப்பி வருகின்றனர். விவசாயிகளுக்கு கட்டுப்படி இல்லாத விலை ஏற்படும்போது காய்கறிகளை அழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. எனவே திண்டுக்கல் மாவட்ட சந்தை அருகே 18 ஏக்கர் நிலம் உள்ளது. இங்கு 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.அமைச்சர் துரைக்கண்ணு: திண்டுக்கல் மாவட்டத்தில் 25 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதன கிடங்கு ஒன்றும், ஒட்டன்சத்திரத்தில் 30 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு இரண்டும், பழனியில் 535 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு 3ம், நத்தம் ேகாபால்பட்டியில் 525 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட கிடங்கு இரண்டும் செயல்பாட்டில் உள்ளது. ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட் அருகே குளிர்பதன கிடங்கு அமைப்பதற்கு தேவை உள்ளதா என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும் என பதிலளித்தார்.

Tags : warehouses ,
× RELATED ரூ.9.17 கோடி செலவில் 2 வட்ட செயல்முறை...