×

நத்தம் மாசிபெருந்திருவிழாவில் மாரியம்மன் பூப்பல்லக்கில் நகர்வலம் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

நத்தம், மார்ச் 13: தென்தமிழகத்தின் திருவிழாக்களில் பிரசித்தி பெற்றதில் ஒன்று நத்தம் மாரியம்மன் கோயில் மாசிபெருந்திருவிழாவாகும். இத்திருவிழா கடந்த 24ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தம் எடுத்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15 நாட்கள் விரதம் தொடங்கினர். அன்றிரவு கம்பம் அம்மன் குளத்திலிருந்து கொண்டு வந்து கோயிலில் ஸ்தாபிதம் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து வந்த வெள்ளி, செவ்வாய், வெள்ளிகிழமை இரவு நேரங்களில் மாரியம்மன் மயில், சிம்மம், அன்னம் போன்ற வாகனங்களில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி மின் ரதத்தில் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த செவ்வாய்கிழமை 10ம் தேதியன்று விழாவின் முக்கிய விழாவான பூக்குழி திருவிழா நடந்தது.இதில் 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் சுமார் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பூக்குழி இறங்கினர். அன்றிரவு கம்பம் அம்மன்குளத்தில் கொண்டு போய் விடப்பட்டது. விழா நாட்களில் பக்தர்கள் அரண்மனை பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுத்தல், கரும்பு தொட்டில் கட்டுதல், மாறுவேடமிட்டு வருதல், அக்கினி சட்டி போன்ற நேர்த்திக் கடன்களை நிறைவேற்றினர்.

Tags : devotees ,Mariamman Poopallakkam ,festival ,Natham Masiparundu ,
× RELATED காரைக்கால் அடுத்த திருநள்ளாறில்...