×

திருமலைக்கேணியில் சங்கடஹர சதுர்த்தி விழா

நத்தம், மார்ச் 13: நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணிய சுவாமி கோயில் அருகிலுள்ள விநாயகர் சன்னதியில் மாசி மாத சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி சுற்று வட்டாரங்களிலிருந்து வந்திருந்த பக்தர்கள் அருகம்புல், ரோஜா, மல்லிகை உள்ளிட்ட பல்வேறு மாலைகளை விநாயகருக்கு காணிக்கையாக செலுத்தி தரிசனம் செய்தனர். மேலும் அருகிலுள்ள முருகபெருமான் சன்னதியிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது. காமாட்சி மவுனகுருசாமி மடத்தில் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர். இதைபோலவே நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோயிலிலுள்ள விநாயகர் சன்னதியில் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.

Tags : Sangatahara Chaturthi Festival ,Thirumalaihenkani ,
× RELATED மடப்புரம்விலக்கு கோயிலில் சங்கடஹர...