×

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், மார்ச் 13: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் திண்டுக்கல்லில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொகுப்பூதியத்தில் 17 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை நடப்பு சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே பணி நிரந்தரம் செய்யவேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக ரூ.21 ஆயிரம் வழங்க வேண்டும். அரசின் காலிப் பணியிடங்களில் டாஸ்மாக் பணியாளர்களை பணியமர்த்த வேண்டும். டாஸ்மாக் நிர்வாகத்தில் நடைபெற்று வரும் முறையற்ற ஆய்வுகள், பணியாளர் விரோதப் போக்கு, முறையற்ற உத்தரவுகளை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்பதை வலியுறுத்தி திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்டத் தலைவர் சத்தியமூர்த்தி தலைமை வகித்தார். மாநில செயலாளர் கண்ணையன் விளக்க உரையாற்றினார். சிறப்பு அழைப்பாளர்களாக சிறப்பு தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொதுச்செயலாளர் கோபிநாத் ஆகியோர் பேசினர். நிறைவாக நிர்வாகி முத்துக்குமார வடிவேல் நன்றி கூறினார்.

Tags : Task Force Employees Association ,
× RELATED என்னாய்யா இந்த ஊரு டீ கசக்குது...?...