×

பனங்குளம் அரசு பள்ளியில் கொரோனா வைரசில் இருந்து தற்காத்து கொள்ள விழிப்புணர்வு

அறந்தாங்கி, மார்ச் 13: கீரமங்கலம் அருகே பனங்குளம் வடக்கு அரசு நடுநிலைப் பள்ளியில் கொரானோ வைரஸ் தாக்குதலில் இருந்து தற்காத்துக் கொள்வதற்காண விழிப்புணர்வு பயிற்சிகள் நடத்தப்பட்டது. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸ் சீனாவில் உள்ள உகான் நகரில் உருவான வைரஸ் அடுத்தடுத்து அந்த நாடு முழுவதும் பரவி அடுத்தடுத்த நாடுகளுக்கும் பரவி சுமார் 4 ஆயிரம் பேருக்கு மேல் உயிர்பலிகளும் ஏற்பட்டு லட்சக்கணக்கானவர்கள் வைரஸ் தாக்குதலில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரானோ வைரஸ் தாக்கினால் அதற்கான உயர் சிகிச்சை அளிப்பதற்காக சரியான மருந்துகள் இன்னும் தயாரிக்கப்படவில்லை என்ற நிலையில் மருந்துகளை தயாரிக்கும் பணியில் ஆய்வாளர்கள் உள்ளனர். ஆனால் அந்த வைரஸ் தாக்காமல் தங்களை தற்காத்துக் கொள்ள முடியும் என்று கூறப்படுகிறது. இதற்கான அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸ் குறித்து கல்வி நிலையங்களிலும் மாணவர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்ற அரசின் அறிவுறுத்தலின்படி புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகில் உள்ள பனங்குளம் வடக்கு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி ஊராட்சி தலைவர் தங்கராஜ் தலைமையில் வட்டாரக் கல்வி அலுவலர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலையில் நடந்தது. இதில் கீரமங்கலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதரா நிலைய டாக்டர் சத்தியராணி கலந்து கொண்டு மாணவர்கள் மத்தியில் கொரானோ வைரஸ் தாக்குதலில் இருந்து தங்களை தற்காத்துக் கொள்ள கைகளை அடிக்கடி கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வெளியிடங்களுக்கு போனால் தும்மல், இருமல் வந்தால் கைக்குட்டை வைத்துக் கொள்ள வேண்டும்.

அந்த துணிகளை உடனடியாக சுத்தம் செய்ய வேண்டும். குளிர்ந்த உணவுப் பொருட்களைவிட சூடான உணவுப் பொருட்களை உட்கொள்ள வேண்டும். சுடுதண்ணீர் குடிக்க வேண்டும் என்பன உள்ளிட்டவற்றை செயல்முறைவிளக்கம் அளித்தார். கை கழுவும் முறைகளை மாணவர்களுக்கு செய்து காண்பித்தார். தொடர்ந்து இளைஞர்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார் மன்றம் தொடங்கப்பட்டு மூலிகை செடிகள், நிழல் தரும் மரக்கன்றுகள் நடப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர் கருப்பையன் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Tags : Panangkulam Government School ,
× RELATED சென்னை மாநகராட்சி பகுதியில் 538 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என தகவல்