×

அறந்தாங்கி அரசு கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கம்

அறந்தாங்கி, மார்ச் 13: ஆவுடையார்கோவிலை அடுத்த பெருநாவலூரில் இயங்கிவரும் அறந்தாங்கி அரசுக் கலை மற்றும் அறிவியல் கல்லூரி திருவள்ளுவர் அரங்கில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் முனைவர் கண்ணன் தலைமை வகித்து துவக்கி வைத்தார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். கருத்தரங்கில் கொரோனா வைரஸ் பற்றியும், அதிலிருந்து தற்காத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றியும் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமசந்திரதுரை மற்றும் மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். மேலும் காணொளி காட்சி மூலமாக விளக்கி கூறினர். இதில் கல்லூரி பேராசிரியர்கள் ராஜேந்திரன், சோனமுத்து, மருத்துவர்கள் ஜெகன், கவுதம், மாரிக்குமார் மற்றும் சுகாதாரதுறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Aranthangi Government College ,
× RELATED 20 வினாடிகள் கைகளை தேய்த்து கழுவ...