×

கந்தர்வகோட்டை புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக்கில் ரத்த தான முகாம்

கந்தர்வகோட்டை, மார்ச் 13: கந்தர்வகோட்டை அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் நடைப்பெற்றது. கல்லூhp முதல்வர் மற்றும் மாணவர்கள் 87 யூனிட் ரத்த தானம் செய்தனர். கந்தர்வகோட்டை அருகே புதுப்பட்டி அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் தஞ்சை மருத்துவ கல்லூரி ரத்த வங்கி தலைமை மருத்துவர் செந்தில்வடிவேலன் தலைமையில் புதுநகர் மருத்துவர் சசிவர்மன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் முத்துக்குமார், திருநாவுக்கரசு, பழனிச்சாமி குழுவினர் பங்கேற்ற ரத்த தானமுகாம் நடைப்பெற்றது.

நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் தமிழ்செல்வம் தலைமை வகித்து முதலில் ரத்த தானம் செய்தார். அதை தொடர்ந்து பொருளாளர் வேல்பிரகாஷ் மற்றும் மாணவர்கள் ஆர்வத்துடன் 87 யூனிட் ரத்த தானம் செய்தனர். முகாம் ஏற்பாடுகளை நாட்டுநலப்பணித்திட்ட அலுவலர் வீரப்பன் மற்றும் சையது ஆலம் செய்திருந்தனா;. இதேபோல் சிவந்தான்பட்டி சமத்துவபுரத்தில் நாட்டுநலப்பணித்திட்டம் சார்பில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு சிறப்பு மருத்துவ முகாமும், பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது. அங்கு கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்தும் அதிலிருந்து தப்பிக்க கை கழுவும் முறைகள் குறித்தும் விளக்கி கூறப்பட்டது.

Tags : Blood donation camp ,Govt ,
× RELATED மணப்பாறை அருகே வாக்களித்த பெற்றோர்களை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்கள்