×

ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

பொன்னமராவதி, மார்ச் 13: பொன்னமராவதியில் தமிழ்நாடு இருசக்கர வாகனங்கள் பழுது நீக்குவோர் தலைமை நலச்சங்கத்தின் சார்பில் ஹெல்மெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி ஹெல்மெட் அணிந்து இருசக்கர வாகனங்கள் பேரணி நடந்தது. காந்திசிலை முன்பு துவங்கிய பேரணியை பொன்னமராவதி டிஎஸ்பி.தமிழ்மாறன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் இன்ஸ்பெக்டர் கருணாகரன், போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்மேரி மற்றும் காவலர்கள், இருசக்கர வாகனங்கள் பழுதுபார்க்கும் மெக்கானிக்குகள் ஹெல்மெட்அணிந்து ஹெலமெட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பி சென்றனர். இதில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ்மேரியும் ஹெல்மெட் அணிந்து மோட்டார் சைக்கிளில் ஓட்டி பேரணியில் கலந்து கொண்டார்.

Tags :
× RELATED சாலை பாதுகாப்பு வார விழா முன்னிட்டு ஹெல்மெட் விழிப்புணர்வு ஊர்வலம்