×

கற்றலில் புதிய உத்திகளை கையாளுதல் குறித்த பயிற்சி

பொன்னமராவதி,மார்ச் 13: பொன்னமராவதி வட்டார வளமையத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் கற்றலில் பூஜ்ஜிய முதலீட்டில் மாணவர்களுக்கு புதிய உத்திகளை கையாளுதல் தொடர்பானபயிற்சி இரண்டு நாட்கள் நடந்தது. பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் தொடக்கநிலை மற்றும் உயர் தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு நடைபெற்று வருகிறது. இப்பயிற்சியை வட்டாரவளமைய மேற்பார்வையாளர் செல்வக்குமார் முன்னிலையில் பொன்னமராவதி வட்டார கல்வி அலுவலர்கள்; ராஜாசந்திரன் மற்றும் பால்டேவிட் ரோசாரியோ ஆகியோர் தலைமை வகித்து தொடங்கி வைத்தனர்.

கற்றல் கற்பித்தலில் புதுமைகளை செலவின்றி எவ்வாறு புகுத்துவது என்பது குறித்தும், சமூக பங்கேற்பு, விளையாட்டுகள் மூலம் கற்றல், மனித விழுமியங்கள், ஆரோக்கியம் ஆகியவை குறித்தும் பயிற்சியில் விளக்கிக் கூறப்பட்டது. இப்பயிற்சியை மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளர் ரெகுநாததுரை பார்வையிட்டு ஆலோசனைகள் வழங்கினார். இப்பயிற்சியின் கருத்தாளராக அரவிந்தர் ஆசிரமத்தை சார்ந்த பாபுஜேசுதாஸ் செயல்பட்டார். இப்பயிற்சி ஏற்பாடுகளை வட்டார வளமைய ஒருங்கிணைப்பாளர் சக்திவேல்பாண்டி செய்திருந்தார்.

Tags :
× RELATED அன்னவாசலில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி