×

சந்தைப்பேட்டை குளத்தில் பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி

கறம்பக்குடி, மார்ச் 13: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே ஆலங்குடி தீயணைப்பு மீட்பு பணிகள் குழு சார்பாக பேரிடர் மேலாண்மை ஒத்திகை பயிற்சி நடை பெற்றது ஆலங்குடி சந்தைப் பேட்டை செட்டி குளத்தில் இந்த ஒத்திகை பயிற்சி நடந்தது. தீயணைப்பு நிலைய அலுவலர் தியாகராஜன் தலைமையில் ஆலங்குடி சேசு கலை அறிவியல் கல்லூரி, பாலி டெக்னிக் கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் சதுரகிரி தொழில் பயிற்சி மாணவர்கள், பொது மக்கள் முன்னிலையில். இந்த ஒத்திகை நடந்தது.

மழை மற்றும் வெள்ள பேரிடர் காலங்களில் குளத்தில் நீச்சல் தெரியாமல் போராடும் மற்றும் தத்தளிப்பவர்கள் எவ்வாறு தப்பித்துக் கொள்வது என்று தீயணைப்பு வீரர்கள் பேரிடர் மீட்பு ஒத்திகை பயிற்சியை அனைத்து தரப்பு பொது மக்கள் மற்றும் மாணவ மாணவிகள் மத்தியில் செய்து காண்பித்தனர்.

Tags : Marketplace Pond ,
× RELATED அறந்தாங்கியில் தீ தொண்டு நாள் வாரவிழா