×

கந்தர்வகோட்டை அருகே வைக்கோல் போர் எரிந்து சாம்பல்

கந்தர்வகோட்டை, மார்ச் 13: கந்தர்வகோட்டை அருகே நெம்மேலிபட்டியில் வைக்கோல்போரில் பற்றி எரிந்த தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர். கந்தர்வகோட்டை அருகே நெம்மேலிப்பட்டி தெற்கு தெருவை சேர்ந்த சுதர்சன் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று காலை திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது. தகவலறிந்த கந்தர்வகோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் ஆரோக்கியசாமி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதனால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags : straw war ,Kandarvagottai ,
× RELATED சாம்பல் கழிவுகளால் சுகாதார சீர்கேடு...