×

கிசான்அட்டையை பயன்படுத்தி பயிர்க்கடன் பெற விண்ணப்பிப்பது எப்படி?

பொன்னமராவதி, மார்ச் 13: தொட்டியம்பட்டி ஊராட்சியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் கிசான் அட்டை மூலம் பயிர்க்கடன் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி பேசினார்.
பொன்னமராவதி அருகே உள்ள தொட்டியம்பட்டி ஊராட்சியில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஊராட்சித் தலைவர் கீதா தலைமை வகித்தார். வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி விவசாயிகளுக்கு வழங்கப்படும் கிசான் அட்டை மூலம் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் பயிர்கடன் வழங்கும் திட்டம் குறித்தும், அதற்கு விண்ணப்பிக்கும் முறைகள் குறித்தும் பேசினார்.

குழந்தைகள், இளம் பெண்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை மேம்படுத்துவது குறித்து குழந்தைகள் வளர்ச்சித்துறை பாண்டியம்மாள் பேசினார். இதில் கோமாரி நோய் தடுப்பு முகாம், கரோனோ வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு குறித்து கிராமசபை கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இதில் முன்னாள் ஊராட்சித் தலைவர் சோலையப்பன், துணைத் தலைவர் சாமிநாதன், ஊராட்சி செயலாளர் செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் சேரனூரில் ஊராட்சி மன்ற தலைவர் காமராஜ், வேந்தன்பட்டியில் ஊராட்சி மன்ற தலைவர் சுமதி ஆகியோர் தலைமையில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது.

Tags :
× RELATED அன்னவாசலில் மின்சாரம் தாக்கி டிரைவர் பலி