×

மணமேல்குடி அருகே இறந்த நிலையில் ஒதுங்கிய டால்பின்

மணமேல்குடி, மார்ச் 13: மணமேல்குடி அருகே இறந்த நிலையில் டால்பின் கரை ஒதுங்கியது. மணமேல்குடி அடுத்த பிஆர்பட்டிணம் கடற்கரையில் இறந்தநிலையில் டால்பின் கரை ஒதுங்கியிருப்பதாக வந்த தகவலின் பேரில் மணமேல்குடி கடலோர பாதுகாப்புக்குழும போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ஜவகர், வனச்சரகர் ராஜசேகர், வனவர் அனந்தீஸ்வரன் மற்றும் அதிகாரிகள் பிஆர்பட்டிணம் கடற்கரைக்கு சென்றனர். அங்கு டால்பின் இறந்த நிலையில் கரை ஒதுங்கியது தெரிந்தது. இறந்தபோன டால்பின் சுமார் 20 கிலோ எடை கொண்டதாகவும் 7அடி நீளம் கொண்டதாகவும் அழுகிய நிலையில் இருந்தது. உடனே அதனை மீட்டு கால்நடை மருத்துவரை சம்பவ இடத்திற்கு வரவழைத்து அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்து புதைத்தனர். இறந்த நிலையில் இருந்த டால்பினை அந்த பகுதிமக்கள் பார்த்து சென்றனர் .

Tags : Manamalgudi ,
× RELATED மணமேல்குடி அருகே மின்னல் தாக்கி 16 ஆடுகள் பலி