×

கல்லூரியில் கொரோனா விழிப்புணர்வு பேரணி

புதுக்கோட்டை, மார்ச் 13: புதுக்கோட்டை மன்னர் கலலூரி நாட்டு நலப்பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டையில் உள்ள மன்னர் கல்லூரியின் நாட்டுநலப்பணி திட்டம், இளையோர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் கல்லூரியில் நடைபெற்றது. இதற்கு கல்லூரி முதல்வர் சுகந்தி தலைமை வகித்து ஊர்வலத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் கல்லூரி வளாகத்தில் தொடங்கி,

பழைய பஸ் நிலையம், அண்ணாசிலை, கீழராஜவீதி வழியாக சென்று மீண்டும் டவுன்ஹாலில் நிறைவுபெற்றது. இதில் கல்லூரி தமிழ்த்துறை தலைவர் சேதுராமன், வரலாற்றுத்துறை தலைவர் பனிதாசன், நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வேலு, இளையோர் செஞ்சிலுவை சங்க திட்ட அலுவலர் முருகையன் உள்பட பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Corona ,awareness rally ,
× RELATED காஞ்சிபுரத்தில் மேலும் 9 பேருக்கு கொரோனா உறுதி