×

பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் குப்பைகளை அகற்றும் துப்புரவு பணியாளர்கள்

தா.பழூர், மார்ச் 13: தா.பழூர் அடுத்த சுத்தமல்லி பகுதியில் பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாமல் துப்புரவு பணியாளர்கள் குப்பைகளைஅகற்றி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு நோய்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால் பாதுகாப்பு உபகரணங்களை வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள சுத்தமல்லி கிராமத்தில் துப்புரவு பணியாளர்கள் எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இன்றி குப்பை கழிவுகளை அகற்றுகின்றனர். தற்போது வைரஸ் தாக்குதல், தொற்றுநோய்களால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ள நிலையில் இதுபோன்று எந்த பாதுகாப்பு உபகரணமின்றி கைகளால் கழிவுகளையும், குப்பைகளையும் துப்புரவு பணியாளர்கள் அகற்றி வருகின்றனர்.

இதுபோல் பல்வேறு ஊராட்சிகளிலும் துப்புரவு தூய்மை பணியாளர்கள் தங்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் வேலை செய்வதால் அவர்களுக்கு தொற்றுநோய் ஏற்படுவதற்கான சூழல் அதிகமாக உள்ளது.
எனவே அனைத்து ஊராட்சிகளிலும் துப்புரவு பணியாளர்கள் நோய் தொற்றில் இருந்து விடுபட மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்ய வேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு தொற்றுநோய் உள்ளதா என்பதை அறிய மாதம் ஒருமுறை அரசு மருத்துவமனையில் பரிசோதனை செய்து கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் துப்புரவு பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Cleaning staff ,
× RELATED பாதுகாப்பு உபகரணம் கேட்ட தூய்மை பணியாளரின் இடமாற்றத்திற்கு தடை