×

மணக்குடி அரசு பள்ளியில் மரக்கன்றுகள் நடும் விழா

அரியலூர், மார்ச் 13: அரியலூர் அடுத்த மணக்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி, மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. கலெக்டர் ரத்னா, எஸ்பி சீனிவாசன் ஆகியோர் தலைமை வகித்தனர். மேலும் முதிய மரங்களுக்கு பஞ்சகல்யாணி அளித்து மேலும் உயிர்ப்பிப்பது பற்றி சோலைவனம் அமைப்பினர் செயல்விளக்கம் அளித்தனர். இதைதொடர்ந்து எஸ்பி சீனிவாசன் பேசுகையில், மாணவர்களின் வளர்ச்சி ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது. அவர்களை சிறந்த வழியில் வழிநடத்தி செல்வது ஒரு ஆசிரியரின் கடமை. சாலை விதிகள் பற்றிய அறிவுரைகள் தினசரி இறைவணக்க கூட்டத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தெரிவிக்க வேண்டும்.

பள்ளி மாணவர்கள் அனைவரும் இருசக்கர வாகனத்தை ஓட்டுனர் உரிமம் இல்லாமல் இயக்குவதை தவிர்க்க வேண்டும். தனது பெற்றோரையும் ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்க அறிவுறுத்த வேண்டும் என்றார். பின்னர் மாணவர்கள் அனைவரும் தாங்கள் இருசக்கர வாகனத்தில் செல்லும்போது ஹெல்மெட் கட்டாயம் அணிந்து செல்வோம் என்று உறுதிமொழி ஏற்றனர்.

Tags : Tree Planting Ceremony ,Manukudi Government School ,
× RELATED மக்களின் வாழ்க்கை தரத்தை உயர வைப்பதே...