×

பெரம்பலூர் மாவட்டத்தில் ரேஷன் குறைதீர் முகாம்

பெரம்பலூர், மார்ச் 13: பெர ம்பலூர் மாவட்டத்தில் உண வுப் பொருள் வழங்கல் சம்பந்தமான பொது மக் கள் குறைதீர்க்கும் முகாம் நாளை (14ம்தேதி) 4 இடங்க ளில் நடக்கிறது என கலெக்டர் சாந்தா கூறியுள்ளார். இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது : பொது விநியோகத் திட்டம் சார்ந்த குறைபாடுகளைக் களைவதற்கும், குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த் தல், நீக்கல், பிழை திருத் தம் செய்தல் போன்ற கோ ரிக்கைகளின் மீது உடனுக் குடன் தீர்வு காண்பதற்கும், சிறப்பு பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் முகாம் நடைபெற்று வருகிறது.

அதன்படி பெரம்பலூர் தாலுகா, குரும்பலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட ஈச்சம் பட்டி கிராமத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்று ம் சிறுபான்மையினர் நல அலுவலர் விஜயன் தலை மையிலும், குன்னம் தாலுகா, குன்னம் கிராமத்தில் மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் கங்காதேவி தலை மையிலும், வேப்பந்தட்டை தாலுகா, தொண்டப்பாடி கிராமத்தில் மாவட்ட ஆதிதி ராவிடர் மற்றும் பழங்குடியி னர் நல அலுவலர் கிறிஸ்டி தலைமையிலும், ஆலத்தூர் தாலுகா, திம்மூர் கிராமத் தில் பொது விநியோகத்தி ட்ட துணைப்பதிவாளர் செல்வராஜ் தலைமையிலும் நாளை (14ம் தேதி) நடைபெற உள்ளது.

இந்த முகாமில் பொது மக் கள் கலந்து கொண்டு உண வுப் பொருள் வழங்கல் மற் றும் குடும்ப அட்டைகள் சம்பந்தமான குறைகளைத் தெரிவித்துப் பயனடைய லாம் என தெரிவித்துள்ளார். 4 இடங்களில் நாளை நடக்கிறது

Tags : Ration Overdrive Camp ,Perambalur District ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட எல்லைக்குள் சிறுத்தை: தவறான தகவல்