×

பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் கொரோனா வைரஸ் தனி வார்டு அமைப்பு

பெரம்பலூர், மார்ச் 13: பெர ம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் சந்தேகம், அறிகுறி உள்ளவர்களுக்கு தனி சிகிச்சையளிக்க மா வட்ட அரசு தலைமை மருத்து வமனையில் தனி வார் டு அமைக்கப் பட்டுள்ளது. கொரோனா அறிகுறி உள் ளவர்களை அரசு மருத்து வமனைக்கு அழைத்துவர பிரத்தியேக வசதியுடன் கூ டிய ஆம்புலன்ஸ் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளது என பெரம்பலூர் மாவ ட்ட அளவிலான ஒருங்கி ணைப்புக் குழுக் கூட்டத் தில் கலெக்டர் சாந்தா கூறினார். பெரம்பலூரில் நேற்று பொ து சுகாதாரத்துறை மூலம் கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட அளவிலான ஒருங் கிணைப்பு குழுக் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட் டத்திற்கு மாவட்ட கலெக்டர் சாந்தா தலைமை வகித் தார். இதில் கொரோனா வைரஸ் என்றால் என்ன, அந்த வைரஸ் எப்படி பரவு கிறது,

வைரஸ் வராமல் தடுப்பது எப்படி என்பது பற்றி பெரம்பலூர் மாவட்ட சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் டாக்டர் கீதாரா ணி கலந்து கொண்டு பேசு ம்போது, பொதுமக்கள் இருமல், தும்மல் வந்தால் கைக் குட்டை வைத்து இரும வே ண்டும். கொரோனா வைர ஸ் இருமல், தும்மல் மூலமாகத்தான் அடுத்தவருக்கு பரவுகிறது. எனவே இருமல், தும்மல் வந்தால் கைக் குட்டையைப் பயன்படுத்த வேண்டும். வீட்டில் இருந் தாலும், வெளியில் சென்று வந்தாலும் அடிக்கடி சோப்பு அல்லது சோப்பு திரவம் கொண்டு அடிக்கடி கைகளை நன்கு கழுவ வேண் டும். கை கழுவாமல் கண், மூக்கு, வாய் போன்ற பகுதிகளில் தொடக்கூடாது. எனவே பொது மக்கள் இதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். சளி, இருமல், மூச்சுத் திணறல் ஏற்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு மருத் துவமனை மருத்துவரை அணுகவேண்டும் எனத் தெரிவித்தார் .

பின்னர் கலெக்டர் சாந்தா பேசும் போது, பெரம்பலூர் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் யாருக்கேனும் இ ருப்பதாக சந்தேகம், அறி குறி இருந்தால் அவர்களு க்கு பெரம்ப லூர் மாவட்ட அரசுத் தலைமை மருத்து வமனையில், தனி வார்டு அமைக்கப் பட்டுள்ளது. அங்கு அவர்களுக்கு முறை யாக தீவிர சிகிச்சை அளி க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா அறி குறி உள்ளவர்களை அரசு மருத்துவ மனைக்கு அழை த்து வர, பிரத்தியேக வசதி யுடன் கூடிய ஆம்புலன்ஸ், 24 மணி நேரமும் தயார் நி லையில் உள்ளது எனத் தெரிவித்தார். மேலும் பெர ம்பலூர் மாவட்டத்தில் கொ ரோனா வைரஸ் பரவாமல் தடுப்பதற்காக மேற் கொ ள்ளப்பட்டுள்ள நடவடிக்கை களை பற்றி எடுத்துரைத் தார். அதோடு கை கழுவு தல் சம்பந்தமான முறைக ளைநேரடியாக கைகள் கழு வும் முறைகளை செய்து காட்டி விழிப்புணர்வு ஏற்ப டுத்தினார்.

கூட்டத்தில் பெரம் பலூர் மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இய க்குனர் டாக்டர் திருமால், துணை இயக்குனர் (குடு ம்பநலம்) ராஜாமுகமது, துணை இயக்குனர் (காச நோய்) நெடுஞ்செழியன், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் சரவண ன், உதவி திட்ட மேலாளர் கலைமணி, தொற்றாநோ ய் ஒருங்கிணைப்பாளர் விவேகானந்தன், மாவட்ட மலேரியா அலுவலர் சுப்பி ரமணியன், இளநிலை பயி ற்சி அலுவலர் கிருஷ்ண மூ ர்த்தி, துணை இயக்குனரி ன் நேர்முக உதவியாளர் (பொ) ராஜ்மோகன், மாவ ட்ட பொது சுகாதார ஆய் வக நுண்ணுயிரியாளர் செண்பக வள்ளி, வட்டார சுகாதார மேற்பார்வையா ளர் மற்றும் சுகாதார ஆய் வாளர்கள் மற்றும் இந்திய மரு த்துவ சங்க தலைவர் டாக்டர் ராஜா முகமது, பெர ம்ப லூர் மாவட்டத்தில் உள் ள அனைத்து அரசு ஆரம்ப சுகா தார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள்,

பெரம்பலூர் தன லட்சுமி சீனிவாசன் மருத் துவமனை மருத்துவர்கள், தனி யார் மருத்துவ மனை மருத்துவர்கள்,செவிலியர் கள் மற்றும் உணவுப் பாது காப்புத் துறை, வட்டார வள ர்ச்சி துறை ஆர்வலர்கள், வட்டார ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து அலுவலர்கள், சமூகநலத்துறை, போக்கு வரத்து துறை, மருந்து கட்டுப்பாட்டுத் துறை அலுவலர் கள், தனியார் மருந்து கடை உரிமையாளர்கள், ஓட் டல் உரிமையாளர்கள், தங் கும் விடுதி உரிமையாளர் கள், வணிகர் சங்கப் பிரதி நிதிகள் மற்றும் திரையர ங்கு உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Perambalur Government Head Hospital ,
× RELATED பெரம்பலூர் மதன கோபால சுவாமி கோயில் பங்குனி உத்திர பெருவிழா