×

5 மணி நேரத்திற்கு மேல் பெண்களை பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் வலியுறுத்தல்

நாகை, மார்ச் 13: 5 மணி நேரத்திற்கு மேல் பெண்களை பணியில் ஈடுபடுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று சர்வதேச மகளிர் தின கருத்தரங்கில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நாகை மாவட்ட மையம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம் நாகையில் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட மகளிர் துணை குழு அமைப்பாளர் ராணி தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் வாசுகி வரவேற்றார். கருத்தரங்கில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் இளவரசன், மாவட்ட செயலாளர் அன்பழகன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

கருத்தரங்கில் பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொந்தரவுகளை இரும்புகரம் கொண்டு அடக்க வேண்டும், பத்துக்கும் மேற்பட்ட பெண்கள் பணி செய்யும் இடங்களில் பெண் தொழிலாளர்களுடைய குழந்தைகளை பாதுகாக்க குழந்தை காப்பகம் அமைக்க வேண்டும், இடைவெளி இல்லாமல் பெண்களை 5 மணி நேரத்திற்கு மேல் வேலையில் ஈடுப்படுத்துவதை தடை செய்ய வேண்டும், பெண்களுக்கு ஆண்களுக்கு இணையாக சம வேலை, சம ஊதியம் வழங்க வேண்டும், உழைக்கம் பெண் ஒவ்வொருவருக்கும் அரசாங்கம் நிர்ணயித்துள்ள குறைந்த பட்ச கூலியை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படடன.

Tags : International Women's Day Seminar ,
× RELATED இயற்கையை பாதுகாத்தால் மட்டுமே...