×

முன்னாள் மத்திய அமைச்சர் மீது வழக்கு 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

நாகை, மார்ச்.13: தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 17 ஆண்டுகளாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் டாஸ்மாக் பணியாளர்களை நடப்பு சட்ட மன்ற கூட்டத்தொடரிலேயே பணி நிரந்தரம், குறைந்த பட்ச ஊதியம் ரூ.21 ஆயிரம், அரசு காலி பணியிடங்களில் பணியமர்த்தம் செய்ய வேண்டும் உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நாகை புதிய பேருந்து நிலையம் அருகே அவுரித்திடலில் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு சங்க மாவட்ட தலைவர் சந்திரவேல் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் கல்யானசுந்தரம், கோவிந்தராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தை விளக்கி மாநில துணைத்தலைவர் பிரகாஷ் பேசினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராமன், பொருளாளர் கோபால், இணைச் செயலாளர் மணிவண்ணன், டாஸ்மார்க் பணியாளர் சங்க மாவட்ட தலைவர் பாண்டியன் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Task Force ,Union minister ,
× RELATED டாஸ்மாக் கடையை திறக்க அதிகாரிகள்...