×

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து 17வது நாளாக முஸ்லிம் பெண்கள் தர்ணா

மயிலாடுதுறை, மார்ச் 13: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து மயிலாடுதுறையில் 17வது நாளாக முஸ்லிம் பெண்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் பங்கேற்ற முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. நாகை மாவட்டம் மயிலாடுதுறை கூறைநாடு சின்ன பள்ளிவாசல் தெருவில், இந்திய குடியுரிமை திருத்த சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த மாட்டோம் என சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி முஸ்லிம் பெண்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 17வது நாளாக போராட்டம் நடந்தது.

இதில் 350க்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் ஆண்கள் கலந்து கொண்டனர். நேற்று முன்தினம் நடைபெற்ற காத்திருப்பு போராட்டத்தில் வானாதிராஜபுரம் முகமதுஷாஜகான், திருமங்கலம் உஜையருல்லா, கிளியனூர் முகமதுரபிக், தமுமக முகமதுபாசித், நீடூர் ஷேக் அலாவுதீன் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர். இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் அய்யர், முன்னாள் எம்எல்ஏ ராஜகுமார், மீத்தேன்திட்ட எதிர்ப்புக்கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன், ஷேக்அலாவுதீன், திருச்சம்பள்ளி ஷாஜகான் உட்பட 10 பேர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Tags : women ,
× RELATED தாயுடன் தூங்கிய 6 மாத பெண் குழந்தை கடத்தல்: 24 மணி நேரத்தில் 2 பெண்கள் கைது