×

காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் தெப்பத்திருவிழா திரளான பக்தர்கள் பங்கேற்பு

காரைக்கால், மார்ச்.13: காரைக்கால் நித்யகல்யாண பெருமாள் கோயிலில் 13-ம் நாள் விழாவாக தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது. காரைக்கால் பாரதியார் சாலையில் நித்தியக்கல்யாண பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் 14 நாள் பிரம்மோற்சவ விழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். நடப்பாண்டு பிரமோற்சவ விழா கடந்த 28ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் நித்திய கல்யாண பெருமாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா நடைபெற்றது . பிரம்மோற்சவ விழாவின் 13-ம் நாள் முக்கிய நிகழ்ச்சியாக தெப்பத்திருவிழா நேற்று முன்தினம் இரவு சிறப்பாக நடைபெற்றது.

விழாவையொட்டி நித்திய கல்யாண பெருமாளுக்கு விசேஷ பூஜைகள் நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் நித்திய கல்யாண பெருமாளின் தெப்பத்திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் கோயில் அறங்காவல் குழு தலைவர் கேசவன், துணை தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன், உறுப்பினர் பிரகாஷ் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : devotees ,Karaikal Nithyakalyana Perumal Temple ,
× RELATED கோவை வெள்ளிங்கிரி மலையில் ஏறிய 3 பக்தர்கள் மூச்சு திணறி பலி